காலியில் ஏற்பட்ட பதற்றம்

Report Print Dias Dias in இலங்கை

காலி – கராபிட்டி பிரதான வீதியில் கலகெடிய சந்தியை வழிமறித்து பிரதேசவாசிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு நோய் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் மருத்துவமனை கட்டிடம் காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்கள் காலி – காரபிட்டி பிரதான வீதியில் சில்லுகளை இட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில உபகரணங்களையும் தீயிட்டு எரித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.