ஜேர்மனில் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் சிக்கலில்! வெளியாகியுள்ள புதிய தகவல்

Report Print Ajith Ajith in இலங்கை

சிறைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் 15 படைவீரர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழருக்கு எதிராக ஜேர்மனிய அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

37 வயதான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவதீபன் என்பவருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் மற்றும் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தமை உட்பட அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 15 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், அவரினால் 13 இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் பலியாகினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.