இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்! களத்தில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள்! வெளிவரும் நேரடி ரிப்போட்..

Report Print Dias Dias in இலங்கை

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் எதற்காக? முக்கிய அரசியல் பிரபலங்கள் தொடர்பில் வெளிவரும் ஆதாரங்கள்.

இலங்கையில் அடுத்தடுத்து தொடர் தாக்குதலால் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது .இலங்கை அரசாங்கத்தால் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியவில்லையா என பெரும்கேள்வி எழுகிறது.

சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான பின்னணி என்ன என பல கேள்விகளுக்கு ஊடகவியாளர் நிராஜ் அவர்கள் பதிலலித்துள்ளார்.

இலங்கையில் நடந்த தாக்குதலில் பல கோணங்களில் விசாரணைகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ் அமைப்பு தானாக முன்வந்து தாக்குதலில் உரிமை கோரியதால் பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

இது மற்றைய முக்கிய நாடுகளின் முக்கிய தாக்குதலுக்கு இலங்கையில் ஒத்திகை பார்க்கப்பட்டதா என பல கேள்விகள் எழுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்ந்தது முஸ்லிம் தாக்குதல் என சொல்லப்படும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆகையால் அவருக்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும் இருக்கும் சம்பந்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இவர் தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேற்குலக களமாக மாறிவரும் நிலையில் இலங்கை இருப்பதால் எல்லா நாடுகளும் எல்லா அமைப்புகளும் ஏதோவொரு வகையில் இங்கு தளம் அமைத்து இருக்கின்றனர் என்ப்து குறிப்பிடத்தக்கது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் விடுதலைப் புலிகள் இந்த மாதிரியான கோர தாண்டவத்தை இலங்கையில் நிகழ்த்தவில்லை என தெரிவித்துள்ளனர்.