ஞாயிறு ஆராதனைகளை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

Report Print Dias Dias in இலங்கை

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடத்துவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளை நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.