முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ராகினியின் தாயாருடைய போலியான புகைப்படம் சமூகவலைத்தளங்களில்

Report Print Dias Dias in இலங்கை

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை ஏற்றிய ஞானசீலன் ராகினி இறுதிக்கட்டயுத்தத்தில் தன்னுடைய தாயிடம் பால் அருந்திக்கொண்டிருந்தபோது எறிகனை வீச்சில் தாயாரின் முதுகுப்பக்கமாக உட்புகுந்த குண்டுச்சிதறல் தாயின் மார்பகத்தை அறுத்துக்கொண்டும் மார்பகத்தை பற்றியிருந்த ராகினியின் இடது கையினை முளங்கையுடனும் அறுத்துச் சென்றது .

றாகினி கெட்டிக்காரியாக வளர்ந்து தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப்பெற்று முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்விகற்கின்றார்.