கிணற்றில் வீழ்ந்த யானைக்குட்டி மீட்பு

Report Print Dias Dias in இலங்கை

வவுனியா கனகராஜன்குளம், பெரியகுளம் ஆயுள் வேத வைத்தியசாலை அமையும் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் யானைகுட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8மணியளவில் யானைக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் கனகராஜன்குளம் பொலிசார், வவுனியா மற்றும் கிளிநொச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 6மாதமான யானைக்குட்டி இன்று பிற்பகல் 7மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தண்ணீர் தேடி மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானைகுட்டியே இவ்வாறு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்துள்ளது.

Latest Offers