தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி!

Report Print Dias Dias in இலங்கை

தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்தாக 36 வயதுடைய பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார் என காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக பணியாளரான இவர் குடும்பத் தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒட்டுச் சுட்டான் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.