கிளிநொச்சி கோர விபத்தில் சிக்கிய கனரக இராணுவ வாகனம்! சிலர் பலி

Report Print Yathu in இலங்கை

கிளிநொச்சி 55ஆம் கட்டை காளி கோயிலடி பகுதியில் புகையிரதத்துடன், கனரக இராணுவ வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

சற்று முன் இடம்பெற்ற குறித்த விபத்தில் சிக்கி இராணுவ வீரர்கள் அறுவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரத பாதுகாப்பு கடவையில் இருந்த சமிக்ஞை வேலை செய்யாத நிலையில், புகையிரத பாதையை கடந்த கனரக இராணுவ வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதியுள்ளது.

இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல் - குமனன்

You my like this video


Latest Offers