இலங்கை எதிர்நோக்கி வரும் ஆபத்து

Report Print Kamel Kamel in இலங்கை

தெற்காசிய பிராந்திய வலயத்தில் மிகவும் வேகமாக வயது முதிர்ந்தவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைந்து வருகின்றது.

எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வயது முதிர்ந்தவர்களில் அதிகளவானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையை எதிர்நோக்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிக வேகமாக வயது முதிர்ந்த சனத்தொகையை அடையும் நாடாக இலங்கை அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுட் காலம் 79 ஆகவும், ஆண்களிச் சராசரி ஆயுட் காலம் 72 ஆகவும் காணப்படுகின்றது.

தற்பொழுது நாட்டில் காணப்படும் சுகாதார வசதிகளின் காரணமாக ஆண்களினதும் பெண்களினதும் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.