யாழ்.சாவகச்சேரி சந்தைக்குள் நுழைந்த பொலிஸாரினால் பரபரப்பு

Report Print Dias Dias in இலங்கை
849Shares

யாழ்.சாவகச்சேரி சந்தையில் இன்று காலை இரு நபர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக பதற்ற நிலை தோன்றியிருந்தது.

முரண்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து மூன்று வாகனங்களில் வந்த பெருமளவான பொலிஸார் சந்தைக்குள் புகுந்து தேடுதல் நடத்தி முரண்பாட்டில் ஈடுபட்ட மற்றையவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.

காலை வேளை சந்தையில் சன நெருக்கடியின் மத்தியில் பெருமளவான பொலிஸார் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஒருவரை கைது செய்து கொண்டு சென்றமையால் மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் ஏற்பட்டிருந்தது.

பின்னர் முரண்பாட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டார் என தெரிய வந்ததும் பதற்றம் தணிந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.