சம்பந்தனின் வீட்டுக்கு திடீர் பொலிஸ் பாதுகாப்பு

Report Print Abdulsalam Yaseem in இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கக் கூடாது என வலியுறுத்தி திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது! திருகோணமலையில் போராட்டம்

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டுக்கு முன்னால் இன்று காலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாத அரசுக்கு ஆதரவு வழங்குவது என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும் எனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் 40இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.