உடைக்கப்படுகிறது பிள்ளையார் கோயில்!! மறுபடியும் தலைதூக்கும் இனவாதம்!

Report Print Gokulan Gokulan in இலங்கை

திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை உடைப்பதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாகவும், உடைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் தென் கைலாய ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்து விவகார அமைச்சரிடம் முறையிடுவதற்காக தென் கைலாய ஆதீனம் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவரை தொர்புகொள்ளமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மிக முக்கியமாக கையாளப்படவேண்டிய இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி செயற்படவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்

தென் கைலாய ஆதீனம் தவத் திரு அகத்தியர் அடிகளார் இந்து விவகார அமைச்சர் மணோ கணேசனுக்கு அனுப்பிவைத்துள்ள அவசர செய்தி இது: