தமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்

Report Print Dias Dias in இலங்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் திருகோணமலை கிளை தலைவருமான குகதாசன் தலைமையிலான அணியினர் தமிழக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துள்ளனர்.

இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஞாநி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சார்பில் இளங்கோ, நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் பங்கு பற்றினர்.

பா.ஜ.கவின் தமிழக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடந்த சந்திப்பில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கவுந்தரராஜன், எம்.பி இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினர் இச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆனாலும் இச் சந்திப்பில் என்ன விடயம் பேசப்பட்டது என்ற விடயம் வெளியிடப்படவில்லை.