இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணியளவில் கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீவிபத்து இடம் பெற்றதுடன் சம்வத்தை கேள்வியுற்ற கல்முனை மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து ஏனைய இடங்களுக்கும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இத்தீவிபத்து எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரியப்படுத்தியுள்ளார்.
இத்தீவிபத்து காரணமாக ஹோட்டலின் சமையலறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் கடையின் பெயர்ப்பலகையும் எரிந்துள்ளது. ஆயினும், இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.