ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து வெளிச் செல்லும் ஒழுங்கையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாற்று வழியாக, தும்முல்ல சுற்றுவட்டத்தின் ஊடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், தேர்ஸ்டன் வீதி வழியாக நந்தா மோட்டர்ஸ் ஊடாக சுதந்திர சுற்றுவட்டம் வழியாக பிலிப் குணவர்தன மாவத்தை, ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தை ஊடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு நுழைய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பாதை அகழ்வு நடவடிக்கைகளின் காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு – பௌத்தாலோக்க மாவத்தை, ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தைச் சந்தியிலிருந்து தும்முல்ல சுற்றுவட்டம் வரையிலான பாதையின் ஒரு ஒழுங்கை, மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
குறித்த பாதை வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.