இன்று காலை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.