தமிழர்களின் ஆதரவு தொடர்பில் கோத்தபாயவின் அதிகார அறிவிப்பு

Report Print Dias Dias in இலங்கை

தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச கூறியதாக பரவி வருகின்ற போலியான செய்திகளுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடங்களை நம்பி ஏமாற வேண்டாம். அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் எனக்கு தேவை.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

“தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு தேவையில்லை” என கோத்தபாய ராஜபக்ச கூறியதாக பரவி வருகின் போலியான செய்திகளுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் சிங்களவர்களின் வாக்குகளை எதிர் பார்க்கின்றேன்.

உண்மையான விடயங்களை ஊடகங்களில் வெளியிடாமல் ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேசிவருகின்ற சூழ்நிலையில், அரசியலில் வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லதை செய்துவிடுவாார் என்ற பயத்தில் சிலர் என் மீது உள்ள தனிப்பட்ட பகையினையும் கொண்டு இவ்வாறு பொய்யான செய்திகளை நாட்டு மக்கள் மனதில் விதைத்திட முயற்சிக்கிறார்கள்.

என்மீதும் நம் நாட்டின் மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை இவ்வாறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலம் திசைமாற்றிவிட இயலாது. இவ்வாறான போலியான செய்திகளுக்கு ஊடகங்கள் துணைபோக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கோத்தபாய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..