கோத்தபாயவுக்கு புதிய சிக்கல்? விசாரணைகள் ஆரம்பம்

Report Print Dias Dias in இலங்கை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்குவதற்கு முன்னரே சட்டவிரோதமாக இலங்கை சடவுச்சீட்டை பெற்றுக் கொண்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த மே மாதம் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான கடவுச்சீட்டு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டு கடிதத்தை சமர்பித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு முன் திரைமறைவில் இவ்வாறு இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று கூறிய அவர், பொலிஸ் தலைமையகத்தில் இது சம்பந்தமான முறைப்பாட்டை வழங்கி விசாரணைக்கு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை இழப்பதற்கு முன் இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு அரச உயர்மட்டத்தில் உள்ள ஒருவரும், கோத்தபாயவின் நெருங்கிய நண்பருமானவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers