தமிழர்களுக்கு தமிழில் மஹிந்த கூறிய முக்கிய தகவல்! நான் இதைத் தான் செய்வேன்..

Report Print Dias Dias in இலங்கை

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழம் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐ.தே.கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல.

2005ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் நாடு இருக்கின்றது. ஆம், எம்மால் முடியும். மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. புகையிரதங்களில் சுதந்திரமாக கொழும்பிற்கு வரமுடியும் என வடக்கு மக்கள் யாரும் நினைக்கவேயில்லை.

டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் இருந்தார். கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை.

ஆனால் அத்தனையையும் எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers