வெளிநாடுகளிற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் அபாய ஒலி

Report Print Dias Dias in இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர்,

இலங்கையின் இறைமையில் தலையிடுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு தீர்வை காண்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எனது நாட்டின் இறைமையில் எவரும் தலையிடுவதற்கு அனுமதியளிக்கமாட்டேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்வதே எனது முதல் பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறையாண்மையில் கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார். ஆனால், ஒருபோதும் அடிபணியமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் பற்றி தூரநோக்குடைய ஒழுக்கமான, மக்களை நேசிக்கும் தேசப்பற்றுடைய ஊழல் மோசடியற்ற ஓர் தலைமைத்துவத்தை அவசியம் இந்த நாட்டில் எழுந்துள்ளது.

நீங்கள் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை வழங்க என்னால் முடியும் நான் அதனை நான் நிறைவேற்றிக் காட்டுவேன்.

இந்த நாட்டின் அனைவரினதும் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன். பௌத்த கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து மதங்களையும் மதித்து செயற்படுவோம்.

ஏனைய மதங்களை மதித்து ஏனைய கலாச்சார அடையாளங்களை பாதுகாத்தலே எமது பலம், அந்த ஒற்றுமையின் ஊடாக பல்வேறு விடயங்களை நாம் சாதித்துள்ளோம்.

நாட்டில் வாழும் அனைவருக்கும் அச்சம, பீதியின்றி வாழ நான் வழியமைப்பேன். எனினும், நான் கடும்போக்குவாத பயங்கரவாதத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையில் தலையிடுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கமாட்டேன் என்பதன் பொருள் வெளிநாட்டுத் தலையீட்டை அல்லது வெளிநாடுகளின் அளவுக்கதிகமான உள்நுளைவுகளை அனுமதிக்க மாட்டேன் என்பது பொருள் ஆகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers