உடன் தேர்தலுக்கு செல்லும் புது வியூகத்தில் மைத்திரி?

Report Print Dias Dias in இலங்கை

மக்களின் முடிவை அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் முன்பாக மக்களின் அபிப்பிராயத்தை நாடி பிடித்து பார்க்க, மாகாணசபை தேர்தலை நடத்துவதென மைத்திரி- மஹிந்த சந்திப்பிலும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

அந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி கம்போடியா சென்றிருந்தார்.

தற்போது, நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி, மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்துள்ளார்.

எல்லை மீள் நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி, மாகாணசபை தேர்தல்களை ஐ.தே.க அரசு பின்தள்ளி வரும் நிலையில், கலப்பு முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியிருக்கும்.

மேலும் சட்டமா அதிபருடன் இந்த விடயம் தொடர்பாக விரைவில் ஆலோசித்த பின்னர் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவார் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

Latest Offers