வவுனியாவில் அமைச்சர் நவீனின் நிகழ்வில் மர்ம நபர்கள் செய்தது

Report Print Dias Dias in இலங்கை

வவுனியா நந்திமித்ரகமவில் நேற்று அமைச்சர் நவீன் திசாநாயக்க கலந்து கொண்ட நிகழ்விற்கு அருகில், மர்ம நபர்கள் காட்டுக்கு தீமூட்டியதால் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நந்திமிடிரகமவில் மீள்குடியேறிய மக்களிற்கு தென்னைகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்விற்காக நவீன் திசாநாயக்க வந்த போது, நிகழ்விடத்திற்கு அண்மையிலிருந்த காட்டிற்கு இனம்தெரியாத சிலர் தீமூட்டியுள்ளனர்.

இதனால், எழுந்த கடுமையான புகை காரணமாக கூட்டத்தை நடத்த முடியாத நிலைமையேற்பட்டதுடன் அமைச்சர் நவீன் திசநாயக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன் அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் தீயை அணைக்க கடுமையாக பிரயத்தனப்பட்டனர்.

புகை சூழ்ந்தபோதும், அமைச்சர் நவீன் திசாநாயக்க நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்தார். காட்டுக்கு தீமூட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.