சஜித் – ரணில் அவசர சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Report Print Dias Dias in இலங்கை

சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே நேற்றைய தினம் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் முரண்பாடுகள் தொடர்பாகவே இருவரும் இந்த சந்திப்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில், ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் கூட்டணி தொடர்பாக விரிவாகப் பேசப்பட்டதோடு, வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் தெரிவைக் கூட்டணி அமைத்த பின்னர் தீர்மானிக்கலாம் என்ற இணக்கப்பாடு தொடர்பில் பிரதமருக்கு சஜித் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணியை அமைக்கலாம் என சஜித் தரப்பு ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers