இலங்கையில் பேஸ்புக் பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Sujitha Sri in இலங்கை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ சில குழுக்கள் முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகள் Phishing Attack எனும் முறையில் திருடப்படுகின்றன.

இவ்வாறு பேஸ்புக் கணக்குகள் திருடப்படுவது கடந்த சில வாரங்களுக்குள் அதிகரித்துள்ளது.

எனவே பேஸ்புக் பயனாளர்கள் தமது பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.