கோத்தபாய விவகாரம் சிக்கலில் சமல் ராஜபக்ச

Report Print Dias Dias in இலங்கை

கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட வெளிநாட்டு குடிமக்களை, வாக்காளர் பட்டியலில் இணைத்தமை குறித்து விளக்கமளிக்குமாறு சமல் ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

செப்ரெம்பர் 2ம் திகதி இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமையை கொண்டிருந்தபோதே, கடந்த 2005இல் கோட்டாபய ராஜபக்ச வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தார்.

மெதமுதலன வீட்டு முகவரியிலேயே அவர் பதிவு செய்யப்பட்டார். எனினும், அப்போது அவர் அமெரிக்க குடிமகன் என்ற விடயம் அண்மையில் வெளியானது.

அவர் தவிர, கோத்தபாயவின் மனைவி, பசில் ஆகியோரும் முறையற்ற விதமாகவே பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது.

அவர்கள் பதிவு செய்த முகவரிக்குரிய வீடு சமல் ராஜபக்சவிற்குரியது என்ற அடிப்படையில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கோத்தபாயவின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படுமா அல்லது வழமை போன்று சாதாரண விடயமாக பார்க்கப்படுமா என்பது தொடர்பில் திடமாக கூற முடியாது என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.