இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை வரும் வெளிநாட்டு தலைவர்

Report Print Gokulan Gokulan in இலங்கை

தமது நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் டோகோ நாட்டின் ஜனாதிபதி ப்போரே எசோசிம்னா இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள அவர் நாளையதினம் இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை பார்வையிடவுள்ளார்.

டோகோ நாட்டின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் மட்ட தொழிலதிபர்கள் இந்த விஜயத்தின் போது இலங்கை வரவுள்ளனர்.