கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடிக் கைது

Report Print Dias Dias in இலங்கை

கனடாவின் ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது, உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இவ் இரு தமிழ் இளைஞகளும் எந்த நாட்டடவர்கள் என குறிப்பிடப்பட வில்லை என்பது சுட்டிக் காட்டத் தக்கது.

இந்த முரண்பாட்டின் போது, வெளியே இருந்து வந்த இருவரில் ஒருவர் தனது மேற்சட்டையை உயர்த்தி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் காண்பித்ததாகவும், மோதல் தீவிரமடைந்த வேளையில் ஒருவர் அடித்து நிலத்தில் வீழ்த்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர்கள் சந்தேக நபர்களால் துரத்திச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்தேக நபர்களில் ஒருவர் தப்பியோடியோர் மீது துப்பாக்கியை நீட்டியதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்தப் பகுதி ஒழுங்கை ஒன்றினூடாக ஓடிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

You My like this Video