இலங்கை பிரபலத்தின் திருமண வீட்டில் மைத்திரி, ரணில் மற்றும் கனிமொழி

Report Print Dias Dias in இலங்கை

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மகளது திருமணம் நேற்றையதினம் பல்வேறு அரசியல் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் வெகு பிரம்மாண்டமாக இடம்பெற்றது.

இதன்போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கனிமொழி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து நேற்றையதினமே முதன்முறையாக கனிமொழி மற்றும் மைத்திரிக்கிடையில் சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், அவர்களுக்கிடையில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எந்த விபரமும் வெளிவரவில்லை.

அத்துடன், இந்த திருமண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.