கொழும்பு கோட்டையில் விசேடபொலிஸார் குவிப்பு

Report Print Dias Dias in இலங்கை
1204Shares

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விசேட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையில் குறித்த பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ரயில்வே ஊழியர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஓய்வில் இருந்த ரயில்வே ஊழியர்கள் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அப் பகுதியில் குழப்ப நிலை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள காரணத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு புகையிரதத்திற்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோர்கள் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.