சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஒருமித்த முடிவு! தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்?

Report Print Dias Dias in இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியிருந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் பொதுவேட்பாளராக களமிறங்கும்படி கோரியபோதும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இந்தநிலையில், இன்று காலையில் நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் அவரை சந்தித்து சிவில் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.

விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் மறுத்து விட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் சார்பில் ஒருவரை களமிறக்க தயாராக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இவ்வாறான கோரிக்கைகள் முக்கியம் பெற்றதை அடுத்து கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை அடையாளம் காணும் பணியில் தற்போது சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான ஏனைய விடயங்கள் விரைவில் ஊடகங்களிற்கு தெரியப்படுத்தப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத சிவில் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையானது சர்வதேசம் மற்றும் தென்னிலங்கை அரசுகளிற்கு பாரிய நெருக்கடிகளை கொடுக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு வேறு அர்த்தத்தை கூறி திசை திருப்பாமல் விட்டால் இந்த செயற்பாடு அரசியல் ரீதியில் பாரிய தாக்கம் செலுத்தும் என மேலும் குறிப்பிட்டார்.

You My Like This Video