ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க கட்டுப்பணத்தை செலுத்தினார் சமல்

Report Print Dias Dias in இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டுப்பணத்தை சமல் ராஜபக்ஷ செலுத்தியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தாத பட்சத்தில் குமார வெல்கம சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.