இலங்கைக்கு பெற்றோல் விநியோகிக்கும் சிங்கப்பூர்

Report Print Ajith Ajith in இலங்கை

சிங்கப்பூரின் விட்டோல் ஆசியா இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளது.

1.5 பில்லியன் ரூபா பெறுமதியான இதற்கான உடன்படிக்கையின்படி குறித்த நிறுவனம் 2020 ஜூலை 14ஆம் திகதி முதல் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும்.

இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சின் தகவல்படி உடன்படிக்கை காலத்துக்குள் சிங்கப்பூர் நிறுவனம் 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் 1.9 மில்லியன் பீப்பாய்களையும், 95 ரக ஒக்டெய்ன் 476000 பீப்பாய் பெற்றோலையும் விநியோகிக்கவுள்ளது.

இந்தநிலையில் 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் 3.4 அமரிக்க டொலர்களுக்கும் 95 ரக பெற்றோல் 3.8 டொலர்களுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.