விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல் விடுத்த இங்கை பிரஜை! மலேசிய நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Kanmani in இலங்கை

மலேசிய விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்போவதாக விமானிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவரின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற இளைஞரொருவர் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து வெடிகுண்டொன்றினை வெடிக்க வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்போது குறித்த நபரை அங்கிருந்த பயணிகள் விமான இருக்கையில் கட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் தறை இறக்கப்பட்டவுடன், விமானநிலைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன், அவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மனநல பாதிப்புக்கு உள்ளானவரென்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பிணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.