தேர்தல் தொடர்பில் கொழும்பு மாவட்ட அரச அதிபரின் சர்ச்சைக்குரிய பதிவு

Report Print Dias Dias in இலங்கை

கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கன்னங்கர, சமூக ஊடகத்தில் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான கருத்துக்களை வௌியிட்டமை தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை சார்பில், தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தில், தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் சஜித்திற்கு எதிராக அவர் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அமைச்சரவை அவரை பதவியிலிருந்து நீக்கும்படியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு அரசாங்க அதிபரின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தபோதிலும், அவரை பதவியிலிருந்து நீக்கி, புதியவரொருவரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, தேர்தல் அறிவிக்கப்பட்டதை காரணம் காட்டி, தேர்தல்கள் திணைக்களம் நிறுத்தி வைத்திருந்தது.

அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரச அதிகாரிகளின் அனைத்து பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும், பதவி நீக்கங்களும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.