தேர்தல் ஆணையாளர் - பிரதமர் ரணில் கலந்துரையாடல்

Report Print Dias Dias in இலங்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தேர்தல் ஆணையாளருடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டார். வடக்கு நிலவரங்கள் குறித்து ஆராய இந்த அவசர சந்திப்பு நடைபெற்றது.

வடக்கில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், மக்கள் வாக்களிக்க நெருக்கடி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன், மன்னாரிற்கு வாக்களிக்க வந்த மக்கள் மீதும் நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று மாலை தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார் பிரதமர்.