இராணுவத்தினரின் தடையை மீறி கொடிகாமத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

Report Print Dias Dias in இலங்கை

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் முகாமிற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.