வடக்கு ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன்??

Report Print Dias Dias in இலங்கை

6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் வட மாகாண ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

என்ற போதும் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வட மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனே முதன்மை இடத்தில் உள்ளதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.