இம்ரான் கானின் விசேட கடிதத்துடன் இலங்கை வந்த பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

Report Print Sujitha Sri in இலங்கை

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 84 ரக விமானத்தின் ஊடாக நேற்றிரவு அவர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விசேட கடிதமொன்றை கையளிக்கும் நோக்கில் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.