அனைத்து வெதுப்பகத் தயாரிப்பாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Dias Dias in இலங்கை

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கமைய ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது 2 கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

Latest Offers

loading...