ஐ. நா மனித அபிவிருத்தி தரப்படுத்தலில் இலங்கை 71ஆவது இடம்

Report Print Ajith Ajith in இலங்கை

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மனித அபிவிருத்தி அறிக்கையின்படி இலங்கை 71 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

189 நாடுகள் வரிசையிலேயே இலங்கை 71ஆவது இடத்தில் தரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று முன்தினம் கொலம்பியா, பொகொட்டாவில் வெளியிடப்பட்டது.

அதியுயர் மனித அபிவிருத்தி, உயர் மனித அபிவிருத்தி, நடுத்தர மனித அபிவிருத்தி மற்றும் குறைந்த மட்ட மனித அபிவிருத்தி என்ற வரையறைகளுக்குள்ளேயே இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் மாலைதீவு 104 ஆம் இடத்துக்கும் இந்தியா 129ஆம் இடத்துக்கும் பூட்டான் 134ஆவது இடத்துக்கும் பாகிஸ்தான்152ஆவது இடத்துக்கும் தரப்படுத்தப்பட்டுள்ளன. சீனா 85ஆவது இடத்தில் உள்ளது.

இந்த அறிக்கையின்படி சுவிட்ஸர்லாந்து, அயர்லாந்து என்பன முதல் இடத்தில் உள்ளன. ஜேர்மனி மற்றும் ஹொங்கொங் ஆகியன அடுத்த இடங்களை பெற்றுள்ளன.

ஐஸ்லாந்து 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது அறிக்கையின்படி நைகர் தாழ்மட்டத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.