2020ஆம் கல்வியாண்டில் 83,000 மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள முக்கிய வாய்ப்பு

Report Print Dias Dias in இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 50,000ஆல் அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையானது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அடுத்த ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 33,000 இருந்து 83,000 வரையில் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இளையோருக்கு இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.