நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட்டுள்ள இலங்கையின் லண்டனுக்கான உயர்ஸ்தானிகர்

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையின் லண்டனுக்கான உயர்ஸ்தானிகர் மனீஷா குணசேகர நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் திருப்பியழைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கொழும்பு திரும்பும் அவர் பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் பிரித்தானியாவுக்கு புறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஒஸ்ரியாவின் தூதுவரான சரோஜா சிறிசேனவுக்கு பதிலாக தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக கடமையாற்றும் மஜிந்தா ஜெயசிங்க நியமிக்கப்படவுள்ளார்.