இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை! மத்திய அரசை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

Report Print Jeslin Jeslin in இலங்கை
58Shares

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அமர்வுகள் இன்றையதினம் ஆரம்பமாகின. இதன்போது முதல்நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும்.

தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.