இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்படும் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பத்திற்கு வீடு அமைக்க நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக சுமார் 6 இலட்சம் ரூபா நிதியானது நிர்மாண பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலான தவணைக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் பேண்தகு அபிவிருத்தியை இலங்கையில் பூரத்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.