மோதலில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Report Print Dias Dias in இலங்கை
238Shares

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

படுகாயமடைந்த இரு மாணவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையிலேயே குறித்த 12 மாணவர்களும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.