டிரம்பின் கடிதத்தை கோத்தாபயவிடம் நேரடியாகக் கையளித்தார் முக்கிய இராஜதந்திரி

Report Print Dias Dias in இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை பிரதி உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார்.

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதத்தில் என்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தொடர்பான எந்த ஒரு தனவலும் வெளிவரவில்லை.

Latest Offers

loading...