கருணாவா தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது?

Report Print Gokulan Gokulan in இலங்கை

தானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கியதாக கருணா என்று அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தானே வன்னிக்குச் சென்று தலைவர் பிரபாகரனிடம் பேசி, அவரை இந்த கூட்டமைப்பு யோசனைக்கு இணங்க வைத்தாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் வன்னியில் வைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் பற்றி தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டபொழுது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கருணாவின் கரங்கள் இருந்ததாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பான விடயம் என்று தெரிவிக்கின்றார்கள்.

2002ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் த.தே.கூ உருவாக்கப்பட்டதாக கருணா கூறியிருக்கும் அதேவேளை, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டிருந்ததைச் சுட்டிக்காண்பிக்கும் அவர்கள், 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி த.தே.கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் அங்கம் வகித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டதையும் சுட்டிக் காண்பித்துள்ளார்கள்.

Latest Offers

loading...