வவுனியாவில் நடத்தைப் பிறழ்வான இராணுவ சிப்பாயை நையப்புடைத்த பொதுமக்கள்

Report Print Dias Dias in இலங்கை

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காண்பித்த இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில்,

குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்.

பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார்.

பின்னர் தாம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறோர் தேவை நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலிற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...