சீனாவிலிருந்து 33 இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுடன் புறப்பட்டது விமானம்

Report Print Ajith Ajith in இலங்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்த இலங்கை மாணவர்களை அழைத்து வர சென்ற விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

யுஎல் 1423 என்ற இந்த விமானம் நேற்று மாலை இலங்கையில் இருந்து வுஹான் மாகாணம் நோக்கி சென்றிருந்தது.

பின்னர் அங்கு தரையிறங்கிய நிலையில் நிர்க்கதியாக இருந்த 33 இலங்கை மாணவர்களையும், அவர்களின் உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு தற்போது இலங்கைக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்ததும் அதில் வருவோர் உடனடியாகவே தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதற்கான முழுமை ஏற்பாடுகளும் படையினரால் செய்யப்பட்டுள்ளன.