இலங்கையில் ஒருவார காலத்திற்கு அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்களில் தேசிய கொடி ஏற்றுமாறு அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in இலங்கை

பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஒருவார காலத்திற்கு அதாவது எதிர்வரும் ஏழாம் திகதி வரை அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின வைபவம் எதிர்வரும் நான்காம் திகதி சுதந்திர சதுக்கத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் குறித்த அறிவித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் மூன்றாம் மற்றும் நான்காம் திகதிகளில் மின் ஒளி அலங்காரம் அரச நிறுவனங்களில் இடம்பெறவுள்ளன.

மேலும் வீட்டு வளவுகளில் மரக்கன்றுகளை நடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...